'பார்த்து நல்ல முடிவா எடுங்க மக்களே' : தேனி போலீசார் வினாேத பிரச்சாரம்

தேனி போக்குவரத்து போலீசார் மாஸ்க் அணிவது தொடர்பான விநோத பிரசாரம் செய்து மக்களை கவர்ந்து வருகின்றனர்.;

Update: 2022-01-06 03:27 GMT

தேனியில் மாஸ்க் அணிவது தொடர்பாக போக்குவரத்து போலீசார் அச்சிட்டுள்ள பிளக்ஸ்.

தேனி போக்குவரத்து போலீசார் மாஸ்க் அணிவது தொடர்பான விநோத பிரசாரம் செய்து மக்களை கவர்ந்து வருகின்றனர்.

தேனியில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது வெகுவாக குறைந்து விட்டது. என்ன தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேனி போக்குவரத்து போலீசார் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர். '2 ரூபாயா? 200 ரூபாயா? 2 லட்சம் ரூபாயா? 'பார்த்து நல்ல முடிவா எடுங்க மக்களே' என பிளக்ஸ் அடித்து தேனி நகரில் வைத்துள்ளனர்.

இந்த பிளக்ஸ் மக்களை கவர்ந்து வருகிறது. இது குறித்து தேனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது: மக்கள் 2 ரூபாய்க்கு மாஸ்க் அணிந்தால் முற்றிலும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம். மாஸ்க் அணியாமல் போலீசிடம் சிக்கினால் 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கொரோனாவிடம் சிக்கினால் 2 லட்சம் செலவிட வேண்டும்.

இதனால் தான் எது நல்லது என்று மக்களுக்கு எளிதாக புரிய வைக்க 'பார்த்து நல்ல முடிவா எடுங்க மக்களே' என பிளக்ஸ் வைத்துள்ளோம் என்றார்.போலீசாரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News