தேனி: இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு சுருளி அருவியில் குளிக்க அனுமதி

தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சுருளிஅருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-03 02:29 GMT

சுருளிஅருவி பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சுருளி அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக சுருளிஅருவி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மூடப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள் சுருளி அருவிக்குள் அனுமதிக்கப்படவில்லை. சுருளிஅருவியை திறக்க வேண்டும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். சுருளிஅருவி சிறுவியாபாரிகள் பலமுறை தேனி கலெக்டரை சந்தித்து நேரடியாக மனு கொடுத்தனர்.

இந்நிலையில் சுருளி அருவியில் குளிக்க பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் அனுமதி வழங்கி உள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 3வது அலை பரவல் வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News