தேனி : வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது
பெரியகுளம் அருகே கும்பக்கரை பகுதியில் தேவதானப்பட்டி வனத்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது;
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி பகுதியில் தேவதானப்பட்டி வனச்சரகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, மாவட்ட வன அலுவலர் வழிகாட்டுதலின் பேரில் மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 98 -வது பிறந்தநாளை முன்னிட்டு, தேவதானப்பட்டி வனசரகர் டேவிட் ராஜ் தலைமையிலான வனத்துறையினர் மரக்கன்றுகளை நட்டனர். இதில் புளி, அரசு, வேம்பு, நாவல், பூவரசு, கடுக்கா, சரக்கொன்றை, செண்பகம், வன்னி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வகை மரக்கன்றுகள் நடப்பட்டது.