theni news today-தேனி சமூக நலத்துறை அலுவலக பணியாளருக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு
theni news today-தேனி சமூக நலத்துறை அலுவலர் ஒருவரை பழிவாங்குவதற்காக முன்னாள் பணியாளர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
theni news today-தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே தேனி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் பட்டப்பகலில் துணிகர அரிவாள் வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி.
தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில் திட்ட அலுவலராக ராஜராஜேஸ்வரி ( 52) என்பவர் பணியாற்றி வருகிறார். 2015ம் ஆண்டு உமாசங்கர் (56) என்பவர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார்.
அலுவல் பணி கோப்புகள் மறுசீரமைப்பு போன்ற வேலைகளில் தனது கை வண்ணத்தை காட்டிவந்த போடியை சேர்ந்த ஜூனியர் அசிஸ்டென்ட் உமாசங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வண்ணம் 70b விதிமுறையின் கீழ் அலுவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக தூக்கியடிக்கப்பட்டார். ஜூனியர் அசிஸ்டன்ட் ராஜராஜேஸ்வரியை பழிவாங்கும் எண்ணத்தோடு ஐந்தாண்டு காலம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
theni news today-இன்று மதியம் ஒரு மணி அளவில் தேனி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் ராஜராஜேஸ்வரி இருந்தபோது உமாசங்கர் அலுவலகத்துக்கு வந்து ராஜராஜேஸ்வரியை தலை மற்றும் கை தோள்பட்டை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜராஜேஸ்வரியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் ஆஜராகி விசாரணை செய்து குற்றவாளி உமாசங்கரை கைது செய்து தேனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.