தேனி நலம் மருத்துவமனையின் சின்னமனுார் கிளை விரிவாக்கம்

தேனி நலம் மருத்துவமனையின் சின்னமனுார் கிளையில் பகல் நேர உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது.;

Update: 2023-07-01 07:30 GMT

தேனி நலம் மருத்துவமனையின் சார்பில் சின்னமனுாரில் செயல்படும் கிளையின் விரிவாக்கப்பட்ட படுக்கை வசதியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே.கே.ஜெயராம் நாடார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தேனியில் நவீன வசதிகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக நலம் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இருக்கும் அளவு சிறப்பான வசதிகள் தேனி நலம் மருத்துவமனையிலும் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன் கிளை சின்னமனுாரில் பஞ்சாயத்து யூனியன் அலுவலக ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கிளையில் நோயாளிகள் சில குறிப்பிட்ட நோய்களுக்கு 15 நாட்கள் மட்டும் மருந்து, மாத்திரை வாங்கினால், மீதம் 15 நாட்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.490 கட்டணத்தில் சர்க்கரை நோய்க்கு ஆறு மாதம் சிகிச்சை அளிக்கும் புதிய பேக்கேஜ் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

சின்னமனுார் கிளையில் புதியதாக பகல் நேர உள்நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு நலம் மருத்துவமனையின் தலைமை டாக்டர் ராஜ்குமார் எம்.டி., (சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்) தலைமை வகித்தார். டாக்டர் முகமதுபாஷித் முன்னிலை வகித்தார். மூத்த மயக்கவியல் நிபுணர் ஜி. பிரபாகரன் (எம்.பி.பி.எஸ்., டி.எ,) துவக்கி வைத்தார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் கே.கே.ஜெயராம் நாடார், சின்னமனுர் நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி பிரபாகரன், சீலையம்பட்டி நிழக்கில்லார் சண்முகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். சின்னமனுர் பகுதியை சேர்ந்த பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News