தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் ரத்ததானம் செய்தவர்களுக்கு சிறப்பு விருது

Blood Donation Day Speech -தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் ரத்ததானம் செய்தவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2022-11-07 02:45 GMT

தேனி நட்டாத்தி நடார் மருத்துவமனையில் நடந்த பாராட்டு விழாவில், ரத்ததானம் செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Blood Donation Day Speech -தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனை நுாற்றாண்டை தொட்ட மருத்துவமனையாக மாறி உள்ளது. இங்கு மட்டும் இதுவரை, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது இந்த மருத்துவமனை நவீன பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, அத்தனை மருத்துவ சேவைகளும் முதல்தரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு அடிக்கடி மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் என மக்கள் நலனுக்கு தேவையான பல முகாம்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தேனி கிழக்கு மாவட்டமும், தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையும் இணைந்து, பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில், வேளாளர் உறவின்முறை சமுதாய மண்டபத்தில் இரத்ததான முகாம் நடத்தினர்.

முகாமில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையின் ரத்தவங்கி பொறுப்பாளர் டாக்டர். அனுமந்தனிடம், தானமாக பெறப்பட்ட ரத்தம் அனைத்தும் வழங்கப்பட்டது.

ரத்ததான முகாமில், அதிகமுறை இரத்தம் வழங்கியவர்கள் மற்றும் ரத்ததானம் செய்பவர்களை ஒருங்கிணைக்கும் சமூகசேவையாளர்களுக்கு தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் சிறப்பு விருதுகள் வழங்கும்விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி நட்டாத்தி நாடார் உறவின்முறை தலைவர் மாரீஸ்வரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நட்டாத்தி நாடார் மருத்துவமனை செயலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டார். மக்கள் நீதி மய்ய கட்சி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர்  ஐயப்பன் வரவேற்றார். வடுகபட்டி பேரூராட்சி துணைத்தலைவர் அழகர் முன்னிலை வகித்தார்.

விழாவில் பசியில்லா பெரியகுளம் சேவைக்குழு நிறுவனர் அஹமது பவுஜுதீனுக்கு சிறந்த சமூக சேவை மற்றும் குருதிக்கொடையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், பெரியகுளத்தை சேர்ந்த பிறர்நலன் நாடுவோம் அறக்கட்டளை தலைவர் அஹமது பாசித் ரகுமானுக்கு சிறந்த சமூக சேவையாளர் விருது வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கி ஒருங்கிணைப்பாளர் கலையரசன், பெரியகுளம் பிறர்நலன் நாடுவோம் அறக்கட்டளை ஹாரூன் ரஷீத், ஜமீல்தீன், சாதிக் பாட்சா, கலாம் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த கலாம்.  சரவணன், தந்தை பெரியார் குருதி கொடைக்கழகம், தலைவர் ஸ்டார். நாகராசன், அவசர இரத்ததான குழு டேனியல், பசியில்லா பெரியகுளம் தாரிக் அஹமது, மல்கர் பீர் ஒலி, தாமரைக்குளம் இரத்ததான குழு அஜித் பாண்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அபுல் கலாம் ஆசாத், இந்திய இரத்ததான குழு பால்ஸ்டார் கிங்ஸ்லி ஆகியோருக்கு சிறந்த குருதிக்கொடையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை நட்டாத்தி நாடார் மருத்துவமனை செயலாளர் கமலக்கண்ணன் வழங்கி பாராட்டி பேசினார். விருது பெற்றவர்களுக்கு பெரியகுளம் வழக்கறிஞர் மணி கார்த்தி, அன்புக்கரசன், டாக்டர் நந்தகோபால சாமி, டாக்டர் அனுமந்தன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News