ஏழு கிடா, 100 கோழி அடித்து விருந்து வைத்த தேனி நகராட்சி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் கிடா, கோழி அடித்து நகராட்சி திமுக கவுன்சிலர்கள் விருந்து வைத்தனர்.

Update: 2022-06-21 10:15 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தேனி நகராட்சி சார்பில் கறி விருந்து நடைபெற்றது. தி.மு.க., முக்கிய தலைவர்கள் பறிமாறினர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா இந்த மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேனி நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் சார்பில் இன்று தேனியில் ஏழு கிடா வெட்டி, 100 கோழி அடித்து விருந்து வைத்தனர். துப்புரவு பணியாளர்கள் 100 பேருக்கு புத்தாடைகள் வழங்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த விருந்தில் சாப்பாடு, எலும்பு குருமா, மட்டன் கிரேவி, சிக்கன் 65, ரசம், மோர், தயிர்பச்சடி, சுவீட் என விருந்து களைகட்டியது. நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், 20வது வார்டு கவுன்சிலர் சூர்யாபாலமுருகன், (துணைத்தலைவர் செல்வம் வரவில்லை), மற்றும் இதர தி.மு.க., கவுன்சிலர்கள் இந்த விருந்தில் பங்கேற்றனர். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், பெரியகுளம் தி.மு.க., எம்.எல்.ஏ., சரவணக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News