சாதனைகளை சொல்லி தேனி நகராட்சி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
தேனி 27வது வார்டில் சென்ற முறை பதவியில் இருந்தபோது செய்தபணிகளை எடுத்துக்கூறி திமுக வேட்பாளர் அய்யனார்பிரபு பிரசாரம்;
தேனி நகராட்சி 27வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அய்யனார்பிரபு கடந்த முறை தான் செய்த சாதனைகளையும், இனி செய்யப்போகும் வேலைகளையும் மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்டார்.
தேனி நகராட்சி 27வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அய்யனார்பிரபு கடந்த முறை கவுன்சிலராக இருந்தார். மிகப்பெரிய அளவி்ல் இந்த வார்டில் வளர்ச்சிப்பணிகளை செய்து, நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தந்து மக்களுக்கு சேவையாற்றி உள்ளார். இன்று வார்டு மக்களிடம் ஓட்டு சேகரிக்க சென்ற இவர், தான் கடந்த முறை மக்களுக்கு செய்த நற்பணிகளையும், இந்த முறை செய்ய உள்ள பணிகளையும் சொல்லி ஓட்டு கேட்டார். மக்கள் அய்யனார்பிரபுவின் சாதனைகள் தங்களுக்கு தெரியும். கடந்த முறை நீங்கள் எப்படி பணிபுரிந்தீர்கள் என்பதை நன்கு கவனித்தோம். இந்த முறையும் நீங்கள் சொன்னபடி நடந்து கொள்வீர்கள் என தெரியும். உங்கள் மீது நம்பிக்கை உள்ளது என உறுதி அளித்தனர்.