பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் தேனி நகராட்சி கமிஷனர் மாற்றம்

தேனி நகராட்சி கமிஷனர் சுப்பையா பொறுப்பேற்ற மூன்று மாதத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-11-27 09:27 GMT

தேனி நகராட்சி கமிஷனர் சுப்பையா.

தேனி நகராட்சி கமிஷனராக இருந்தவர் சுப்பையா. இவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற அன்றே பிரச்னை தொடங்கியது. வாழ்த்து சொல்வதற்கு சென்ற என்னை ஜாதி ரீதியாக அசிங்கப்படுத்தி விட்டார் என்று நகராட்சி ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

அன்று முதல் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை நகராட்சி அலுவலகத்தில் கமிஷனருக்கு எதிராக நடந்து கொண்டே இருந்தது. கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். நகராட்சி அலுவலர்கள் 42க்கும் அதிகமானோர் இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் யாரும் கைது செய்யப்படவில்லை. எந்த பணம், பொருள் கைப்பற்றப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகராட்சி கமிஷனரை கண்டித்து நகராட்சி அலுவல வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இப்படி பிரச்னைகளுக்கிடையே சுப்பையா நிர்வாகம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை நகராட்சிக்கு மாற்றப்பட்டார். புதுக்கோட்டை நகராட்சி கமிஷனராக இருந்த வீரமுத்துக்குமார் தேனிக்கு மாற்றப்பட்டுள்ளர்.

இந்த மாற்றம் தேர்தலுக்கானது என கூறப்பட்டாலும், பிரச்னைகளை தவிர்க்கவே சுப்பையா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தி.மு.க.,வினர் பகிரங்கமாகவே ஒப்புக்கொள்கின்றனர்.

Tags:    

Similar News