தேனி நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் அதிருப்தி
தேனி நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது;
தேனி நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் திமுகவினர் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
தேனி நகராட்சி தலைவர் பதவி திமுகவு க்கு கிடைக்கும் என நினைத்து, நகர செயலாளர் பாலமுருகன் மனைவி ரேணுப்பிரியா தான் வகித்த வடபுதுப்பட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவியை உதறி விட்டு வந்து தேனி நகராட்சி பத்தாவது வார்டில் போட்டியிட்டு வென்றார். அவரது கணவர் பாலமுருகனும் இருபதாவது வார்டில் நின்று வென்றார். மொத்தம் தேனியில் திமுக தனித்து பத்தொன்பது இடங்களை வென்றது. இந்நிலையில் நகராட்சி தலைவர் பதவிக்கு, தேனியில் இரண்டு இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சி போட்டிக்கு வந்தது. தேனி மாவட்ட நிர்வாகிகள் இதற்கு மறுத்த நிலையில், ராகுல் காந்தியிின் வருகையை பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் கட்சி அவர் மூலம் ஸ்டாலினிடம் நேரடியாக பேசி தங்களுக்கு வேண்டிய இடங்களை பெற்றது. இதன்மூலம் தேனி நகராட்சி தலைவர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு சென்று விட்டது.
தகவல் அறிந்த திமுக கவுன்சிலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்று காலை முதல் யாரும் யாருடைய போன் அழைப்பையும் ஏற்கவில்லை. கட்டுப்பட்டு தி.மு.க. மேலிடத்தின் முடிவை ஏற்பதா அல்லது எதிர்த்து களம் கண்டு வெற்றி பெற்ற பின்னர் மேலிடத்தை சந்தி்தது மன்னிப்பு கேட்டு சமரசம் செய்து கொள்ளலாமா? என அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.