தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறையின் மருத்துவமனை திறப்பு
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறையின் சார்பில் மருத்துவமனை திறக்கப்பட்டது.;
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறையின் சார்பில் 15 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தவிர கோயில்கள், பால்பண்ணைகள், அச்சகங்கள், தொழில்பயிற்சி நிறுவனங்கள் உட்பட மொத்தம் 24க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. தற்போது புதிதாக காமராஜ் மருத்துவமனை திறக்கப்பட்டது.
தேனி சமதர்மபுரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் கே.பி.ஆர்.,முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், அனைத்து நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.