தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு மே 28 ல் தேர்தல்
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு மே 28 -ம் தேதி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது;
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தமிழக அளவில் நாடார் உறவின்முறைகளில் 3வது மிகப்பெரிய உறவுமுறை சங்கமாக உள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. 15 கல்வி நிறுவனங்கள் உள்பட மொத்தம் 25 நிறுவனங்கள் உள்ளன. இந்த சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
இந்த ஆண்டு தேர்தல் வரும் மே 28ம் தேதி நடக்கிறது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சங்க கட்டடத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அன்றே ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. இதற்காக மூன்று அணியினர் போட்டியிடுகின்றனர். முதல் அணியில் 16 பேரும், இரண்டாம் அணியில் 14 பேரும், மூன்றாம் அணியில் 4 பேரும் களம் இறங்கி உள்ளனர். போட்டியிடுபவர்கள் சங்க உறுப்பினர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ஒட்டு வேட்டையாடி வருகின்றனர்.