தேனியில் இயந்திர தொழிலாளர் நலச்சங்க கொடியேற்று விழா
தேனியில் அனைத்து இயந்திர தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் கொடியேற்று விழாவும் அன்னதானமும் நடைபெற்றது.;
அனைத்து இயந்திர தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் தேனியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட அனைத்து இயந்திர தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் பெருமாள் கொடியேற்றி வைத்தார்.
தொழிலதிபர் பிரகாஷ் உடல் ஊனமுற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்க இலவச சீருடைகள் வழங்கினார். மாவட்ட செயலாளர் கவியரசு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பொருளாளர் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.