தேனி காளியம்மன், மாரியம்மன் கும்பாபிஷேகம்: ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

தேனியில் வெற்றி கொம்பன் விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன.;

Update: 2022-03-04 09:16 GMT

தேனி பத்ரகாளியம்மன் கோயில் கும்பத்தை வழிபட்ட  மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராம் நாடார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சார்பில் நேரு சிலை சந்திப்பு அருகே வெற்றிக்கொம்பன் விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயி்ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உறவின்முறை தலைவர் முருகன், பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன், சொத்துப்பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராம்நாடார் உட்பட பலர் பங்கேற்றனர். நாடார் இன மக்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து காலை 7 மணி முதல் மாலை வரை இடைவிடாத அன்னதானம் நடந்தது. மொத்தம் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அன்னதானத்தில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News