தேனியில் நகை, பணம் திருட்டு: திருடர்கள் மீண்டும் அட்டகாசம்
தேனியில் பூட்டிய வீட்டை உடைத்து பணம், நகைகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்;
தேனி கே.ஆர்.ஆர்., நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று வீடுகளை உடைத்து பணம், நகை திருடப்பட்டது. இந்த கும்பல் சிக்கிய நிலையில், மீண்டும் அல்லிநகரத்தில் திருட்டு நடந்துள்ளது. தேனி அல்லிநகரம் அண்ணாநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் தன் மனைவி பரிமளா மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டை பூட்டி விட்டு கோயிலுக்கு சென்றிருந்தார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் மூன்றரை பவுன் தங்க நகைகள், மற்றும் 18 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றனர். பரிமளா கொடுத்த புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.