தேனியில் நாய்களால் தொல்லை; இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது.;

Update: 2024-10-21 02:11 GMT

தேனியில் நடந்த இந்து எழுச்சி முன்னணி வார வழிபாட்டு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்து எழுச்சி முன்னணி மாவட்ட துணை தலைவர் விஸ்வாபாலமுருகன்  தலைமை தாங்கினார். இந்து எழுச்சி முன்னணியின் தேனிநகரசெயற்குழு உறுப்பினர் நாகலிங்கம்  முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் இராமராஜ்  கலந்து கொண்டு வழிநடத்தினார்

நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் (1) : தேனி நகரில் நாய்களால் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய ஆபத்துகள் வந்த வண்ணம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நாய்களை கட்டுப்படுத்த முன்வர வேண்டும். நாய்களை கொல்ல வேண்டாம். பிடித்து சென்று பாதுகாப்பான இடத்தில் விட்டு விட வேண்டும். நகரில் நாய்த்தொல்லை இல்லாத சூழல் உருவாக்க வேண்டும்.

தீர்மானம் ( 2): தேனி நகரில் ரயில் வரும் நேரத்தில் சில மாதங்களாக காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிற்பதில்லை . இதனால் இருபுறமும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நெரிசல் ஏற்பட்டு சரியாவதற்கு நேரகாலம் ஆவதால் பொதுமக்கள் மிகவும்பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே தேனி மாவட்ட காவல்துறை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இந்து எழுச்சி முன்னணி கேட்டுக் கொள்கிறது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News