தேனியில் இன்றைய சோதனை முடிவுகளில் 263 பேருக்கு கொரோனா தொற்று
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று 263 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.;
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 707 பேர் மருத்துவ பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்தனர். இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 263 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. (தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை தனி). தினசரி தொற்று கடந்த நான்கு நாட்களாக மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. தற்போது 22 பேர் சிகிச்சையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.