தேனி: காணாமல் போன 110 செல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Crime News Tamil - தேனி மாவட்டத்தில் காணாமல் போன 110 செல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2022-06-24 03:28 GMT

பைல் படம்.

Crime News Tamil - தேனி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 763 மொபைல் போன்கள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதில் 714 மொபைல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று 110 மொபைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு 15 லட்சம் ரூபாய் ஆகும்.

உரியவர்களிடம் மொபைலை ஒப்படைத்து எஸ்.பி., பேசும்போது அனைவரும் மொபைலில் பைன்டிங் டிவைஸ் செயலியை பயன்படுத்த வேண்டும். இதனை பயன்படுத்திக் கொண்டால் மொபைலை தொலைத்தவர்களே இணையம் மூலம் தங்களது தொலைந்த மொபைல் போன் இருக்கும் இடத்தை கண்டறிந்து விடலாம். அலைபேசியை பயன்படுத்தியவர்கள் சிம் கார்டு மாற்றினாலும் கண்டறிந்து விட முடியும் என்றார்.

ஏ.எஸ்.பி., கார்த்திக், சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்.ஐ., பாக்கியம் உடன் இருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News