தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் நைட்டிங்கேர்ள் சிலை வைக்க எதிர்ப்பு

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் நைட்டிங்கேர்ள் சிலை வைக்க இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-04-22 03:27 GMT

தேனி மருத்துவக் கல்லுாரி முதல்வரை இந்து எழுச்சி முன்னணியினர் சந்தித்து நைட்டிங்கேர்ள் சிலை வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒரு தலைமை செவிலியர் பிற செவிலியர்களிடம் பணம் வசூலித்து, பிளாரன்ஸ் நைட்டிங்கேர்ள் சிலை வைக்க பூமி பூஜை நடத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதனை சந்தித்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

இதேபோல் இந்து முன்னணியினரும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நைட்டிங்கேர்ள் சிலை வைக்க தோண்டப்பட்ட குழி மூடப்பட்டதாக முதல்வர் பாலாஜிநாதன் அறிவித்தார். மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் எந்த சிலை வைக்கவும் அனுமதியில்லை எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News