தேனி: தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 1598 பேருக்கு பணி நியமன ஆணை

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 1598 பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2021-12-21 02:44 GMT

தனியார் துறை வேலை வாய்ப்பிற்கான பணி நியமன உத்தரவை கலெக்டர் முரளீதரன் தேர்வான பெண்ணுக்கு வழங்கினார்.

தேனி மாவட்டத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 1598 பேருக்கு வேலையில் சேருவதற்கான பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கம்பத்தில் தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்ற வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 1598 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது.

பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் முரளீதரன், எஸ்.பி.,பிரவீன்உமேஷ் டோங்கரே, எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், மற்றும் மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்ராஜ், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா, சின்னமனுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிவேதா அண்ணாத்துரை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் கோடீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News