இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி மருத்துவக் கழிவுகள் அகற்றம்
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டது. பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மைய கழிவுகளை பொதுவெளியில் கொட்டப்படுவதால் நோய் பரப்பும் அபாயம் உள்ளதாக நமது இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி விடுதி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தி வந்த உடைகள், முக கவசம், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவைகளை பொதுவெளியில் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து கடந்த 05.06.2021-ம் தேதி நமது இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.இதனைத்தொடர்ந்து தற்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய அளவிலான குழி எடுக்கப்பட்டு மருத்துவக் கழிவுகள் அனைத்தும் கொட்டி மூடப்பட்டது.
பொதுமக்களின் குறைகளை செய்தியாக வெளியிட்டு தீர்வு கண்ட இன்ஸ்டாநியூஸ் செய்தி தளத்திற்கு அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்தனர்.