ஆம்பூர் பாணியில் தேனிக்கு மன்னிப்பு கிடைக்குமா.. என்ன செய்யப்போகிறது திமுக தலைமை

ஆம்பூர் நகர செயலாளருக்குமன்னிப்பு வழங்கியதை போல் தேனி நகர செயலாளருக்கும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது;

Update: 2022-03-10 12:00 GMT

ஆம்பூர் நகர செயலாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கையினை ரத்து செய்து தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை.

தேனி நகராட்சி தலைவர் பதவியை முதன் முறையாக திமுக கைப்பற்றி உள்ளது. தேனி நகர திமுக செயலாளர் பாலமுருகனின் மனைவி ரேணுப்பிரியா இந்த தற்போது நகராட்சி தலைவராக இருந்து வருகிறார். ஆனால் தேனி நகராட்சி தலைவர் பதவி கூட்டணியில் காங்கிரஸ்  கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எனவே தி.மு.க பதவி விலக வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டது.

தீர்ப்பினை மாற்றுங்கள் என மேலிடத்திடம் தேனி நகர செயலாளர் பாலமுருகன் கெஞ்சி வருகிறார். இது தொடர்பாக திமுக. - காங்கிரஸ்  தலைவர்களிடையே பல  கட்டமாக  பேச்சு நடத்தியும் பலனில்லை. இந்த விவகாரம் சென்னை அறிவாலயம் வரை சென்று விட்டது. இதில் திமுக  வினர் தங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை  அடுக்கி வைத்தனர். இதனை கேட்ட அறிவாலய நிர்வாகிகள் அசந்து போயினர். குறிப்பாக காங்கிரஸ் வேட்பாளர் சற்குணம், அவரது மகன் டாக்டர் தியாகராஜனுக்கு அதிமுகவில் இருந்த செல்வாக்கு, அந்த செல்வாக்கு மூலம் அவர் அதிமுகவில் பெற்ற பதவிகள், திமுக வினரை அவர் ஆரம்பம் முதலே புறக்கணித்த ஆதாரங்கள், தற்போதய தேனி சூழ்நிலை, திமுக வென்றெடுத்த விதம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திமுக தேனி நகர செயலாளர் பாலமுருகன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் திமுக மேலிடத்திடம் அழுத்தம்  திருத்தமாக  பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இவ்வளவு நாள் நடவடிக்கை எடுக்காத திமுக மேலிடம் தற்போது ஒரு சிக்னல் கொடுத்துள்ளது. அதாவது தேனி பாணியில், வேலுார் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக நகர செயலாளருக்கு பொதுமன்னிப்பு வழங்கி உள்ளது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து, தேனிக்கும் இதே பாணியில் பொதுமன்னிப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேனி திமுக  நகர செயலாளர் பாலமுருகனும், அவரது மனைவியும், நகராட்சி தலைவருமான ரேணுப்பிரியா பாலமுருகனுக்கும் பொதுமன்னிப்பு கிடைக்கலாம் என திமுகவினர் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News