நான்கு மாதங்களுக்கு பின்னர் சைபரை தொட்டது கொரோனா

தேனி மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு பின்னர் கொரோனா தொற்று முதன்முறையாக சைபர் என்ற இலக்கில் பதிவாகி உள்ளது.

Update: 2022-08-14 15:54 GMT

தேனி மாவட்டத்தில் கொரோனா முதல் அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் அலை பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியது. பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்தன. தற்போதய நிலையில் 90 சதவீதம் பேர் வரை மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில் மூன்றாம், நான்காம் அலைகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக மூன்றாம் அலையில் தமிழகத்தின் பிற பகுதிகள் பாதிக்கப்பட்டன. கேரளா மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானது. ஆனால் கேரள எல்லையோரம் உள்ள தேனி மாவட்டத்தில் பாதிப்பு இல்லை.

அதேபோல் நான்காம் அலையில் தொடர்ச்சியாக பாதிப்புகள் பதிவாகி வந்தாலும், யாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு கூட பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் நான்காம் அலையில் நான்கு மாதங்களுக்கு பின்னர் முதன் முறையாக இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சைபர் என்ற அளவில் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News