தேனி மாவட்ட தீயணைப்புத் துறையினர் 25 பேருக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி
தேனி மாவட்ட தீயணைப்பு மீட்பு படையினர் 25 பேருக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி வழங்கப்பட்டது.;
தேனி மாவட்டத்தில் உள்ள 25 தீயணைப்பு படை வீரர்களுக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. போடியில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார், துணை அலுவலர் குமரேசன், போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
பேரிடர் காலங்களில் நவீன உபகரணங்களை கையாள்வது, மக்களை பேரிடர்களில் இருந்து மீட்பது உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. பே ரிடர் காலங்களில் பயன்படுத்த நவீன உடைகள், உபகரணங்கள் வழங்கப்பட்டன.