தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் பெயரில் மோசடி தொடர்பாக எச்சரிக்கை
தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் பெயரில் மோசடி தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் புரொபைல் படத்துடன், கலெக்டர் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி வாட்சாப் மூலம் வந்தது. இதனை கண்டு சந்தேகம் அடைந்த அரசு ஊழியர்கள் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக தேனி சைபர்கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ் விசாரணை நடக்கும் நிலையில், வேறு ஒரு நம்பரில் கலெக்டர் பெயரில் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு மீண்டும் அதேபோல் வாட்சாப்பில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அரசு வீடு வழங்கும் திட்டத்தில் ஒதுக்கீடு பெறுவதற்கு பணம் வழங்க வேண்டும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனை அறிந்த கலெக்டர் முரளீதரன், 'எனக்கு அரசு வழங்கிய 94441 72000 என்ற நம்பரை மட்டும் பயன்படுத்துகிறேன். வேறு எந்த நம்பரில் இருந்தும் எனது பெயரில் குஞ்செய்தி வந்தாலும், யாரும் நம்ப வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.