தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி, 21 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக அள்ளிய திமுக

தேனியில் 6 நகராட்சிகள், 21 பேரூராட்சிகளை திமுக அள்ளியது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை அமமுக கைப்பற்ற வாய்ப்பு.

Update: 2022-02-22 11:42 GMT

தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க., ஆறு நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளையும் கைப்பற்றி உள்ளது.

மொத்தம் உள்ள 22 பேரூராட்சிகளில் 21ஐ தி.மு.க., கைப்பற்றியது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மட்டும் 15 வார்டுகளில் ஏழு தி.மு.க., கைப்பற்றி உள்ளது. ஆறு வார்டுகளை அ.ம.மு.க.,வும், இரண்டு வார்டுகளை அ.தி.மு.க.,வும் கைப்பற்றி உள்ளன. இதனால் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருவரின் ஆதரவை அ.ம.மு.க., பெறும் எனத்தெரிகிறது.

அப்படி பெற்றால் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை அ.ம.மு.க., கைப்பற்றும் எனத்தெரிகிறது. தேனி மாவட்ட அரசியல் வரலாற்றில் ஆண்டிபட்டி உட்பட அத்தனை பேரூராட்சிகளையும், நகராட்சிகளையும் இழந்து அ.தி.மு.க., தனது கோட்டையை முற்றிலும் பறி கொடுத்து விட்டு நிற்கிறது.

Tags:    

Similar News