தேனி மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு
தேனி மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 673 பேர் கொரோனா தொற்றுக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது.
இதன் அடிப்படையில் 62 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.