தேனி மாவட்டத்தில் புதியதாக 40 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில், 40 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.;
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்தில் நேற்று 2474 பேர் நோய் தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் மிகப்பெரும்பாலானோருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருக்கலாம் (ஒமிக்ரான் உறுதி செய்ய குறைந்தபட்சம் 5 நாட்கள் இடைவெளி தேவைப்படும்) என மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2 பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர் என தேனி மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.