தேனி மாவட்டத்தில் புதியதாக 5 பேருக்கு தொற்று உறுதி
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளிலும் 5 பேருக்கு கொோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
தேனி மாவட்டத்தில் மூன்று மாதங்களாக முழு கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. நேற்று தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 1084 பேர் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டனர்.
இதன் முடிவுகள், இன்று காலை வெளியானது. இந்த முடிவுகளிலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்று வருவதால், ஒரே ஒருநபர் மட்டும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெறுகிறார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.