தேனி: மீண்டும் ஒற்றை இலக்கத்திற்கு வந்த கொரோனா தினசரி பாதிப்பு
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் குறைய தொடங்கியது.;
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வந்தது. பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மக்கள் அச்சமடைந்தனர். தினசரி கொரோனா பாதிப்பு 18 சதவீதம் வரை உயர்ந்தது. நேற்று இதன் அளவு சற்று குறைந்தது. இன்று மேலும் குறைந்து தினசரி கொரோனா பாதிப்பு 6.5 சதவீதமாக மட்டுமே பதிவானது. மொத்தம் மாவட்டத்தில் ஏழு பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 15 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்று இரட்டை இலக்கில் பதிவாகி வந்தாலும், பாதிக்கப்பட்ட யாருக்கும் பெரிய அளவில் எந்த உடல்நலக்குறைபாடும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது சற்று நிம்மதியை கொடுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.