தேனி: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உதவியாளர் கைது

தேனி மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-04-22 03:10 GMT
தேனி: பட்டா மாறுதலுக்கு லஞ்சம்  வாங்கிய வி.ஏ.ஓ., உதவியாளர் கைது
  • whatsapp icon

தேனி மாவட்டம் குள்ளப்புரம் வி.ஏ.ஓ., விஜயன், (வயது40.).இவரது உதவியாளர் இளமுருகன்,( 39. ).இவர்கள் விவசாயி ஈஸ்வரனிடம் அவரது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து வழங்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளனர். ஈஸ்வரன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

தேனி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கருப்பையா, இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா ஆகியோர் ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். ஈஸ்வரன் அந்த பணத்தை கொண்டு போய் இளமுருகனிடம் கொடுத்தார். இந்த பணத்தை விஜயன், இளமுருகன் ஆகியோர் வாங்கும் போது மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.,யும், இன்ஸ்பெக்டரும் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tags:    

Similar News