தேனி பி.டி.ஆர். கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க வலியுறுத்தல்

தேனி பி.டி.ஆர். கால்வாயில் 19.40 கி.மீ. நீளத்துக்கு கான்கிரீட் தளம் அமைத்து 19 கண்மாய்களிலும் நீர் நிரப்ப வேண்டும்.;

Update: 2023-12-02 03:45 GMT

தேனி பிடிஆர் கால்வாய்(பைல் படம்)

தேனி பி.டி.ஆர். கால்வாயில் 19.40 கி.மீ. நீளத்துக்கு கான்கிரீட் தளம் அமைத்து 19 கண்மாய்களிலும் நீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றில் உத்தமபாளையத்தில் இருந்து பி.டி.ஆர்., கால்வாய் பிரிந்து சின்னமனுார், தேனி ஒன்றியங்களில் 19 கண்மாய்களை நிரப்புகிறது. இதன் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு போகம் நெல் சாகுபடி நடக்கிறது. நடப்பு ஆண்டு பி.டி.ஆர்., கால்வாய் தண்ணீர் இதுவரை திறக்கவில்லை மழையால் கண்மாய் தற்போது வரை கண்மாய்கள் ஓரளவு மட்டுமே நிரம்பி உள்ளது. இருப்பினும் தற்போது கண்மாயில் இருக்கும் நீரில் எடுக்க வாய்ப்பு இல்லை. பி.டி.ஆர்., கால்வாயும், அதன் ஷட்டர்களும், இணைப்பு கால்வாய்களும் துார்ந்து போய் உள்ளதால் நீர் நிரம்பினாலும் கண்மாய்கள் நிரம்ப அதிக காலம் பிடிக்கும். கால்வாய்கள் துார்வாரப்படாததால், தண்ணீர் வீணாகிறது.

இந்த சிரமங்களை குறைக்க பி.டி.ஆர்., கால்வாய் முழுவதும் துார்வாரி கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் கூறியதாவது: பி.டி.ஆர்., கால்வாய் தண்ணீர் மூலம் உத்தமபாளையம் ராமசாமிநாயக்கன்பட்டி கண்மாய், பாலசமுத்திரம் கண்மாய், புளியகவுண்டன்குளம், காமாட்சிபுரம், சின்னகவுன்டன்குளம், நந்தவனக்கண்மாய், கன்னிமார்கண்மாய், தாடிச்சேரி கண்மாய், வண்ணான்குளம்,

கோவிந்தநகரம் கண்மாய், அம்பாசமுத்திரம் கண்மாய், பாலகிருஷ்ணாபுரம் கண்மாய், தொந்தி மலையகவுண்டன்குளம், மல்லிச்சேரி கண்மாய், நகையகவுண்டன்குளம், பழனிமுத்துக்கவுண்டன்குளம், தாடிச்சேரிக்கண்மாய், புதுக்குளம் கண்மாய் உட்பட 19 கண்மாய்கள் நிரம்புகின்றன. இந்த கால்வாய் 19.400 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கால்வாய் முழுக்க கான்கிரீட் தளம் அமைத்து, ஷட்டர்களை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பி உள்ளோம் என்றார்.

இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‛பி.டி.ஆர்., கால்வாயினை சீரமைத்து கான்கிரீட் தளம் அமைக்க முன்பு 12 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டது. அப்போது திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் தற்போது திட்ட மதிப்பீடு 25 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதனை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பணிகள் தொடங்கும். இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News