கோயில்களில் திருட்டினை தடுக்க இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!

தேனி நகரில் கோயில்களில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும்.

Update: 2024-10-19 06:05 GMT

கோயில் திருட்டு குறித்து விசாரிக்கும் காவல்துறை. -கோப்பு படம் 

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஜீ தலைமையில் தேனி எஸ்.பி.,யிடம் புகார் மனு வழங்கப்பட்டது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

அந்த மனுவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தேனி தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள பாலமுருகன் கோவிலிலும், தேனி வீரகாளியம்மன் கோயிலிலும், தேனி சுப்பன் செட்டி தெருவில் உள்ள சின்ன ஸ்ரீ சடையால் திருக்கோயில் ஆகிய மூன்று கோயிலிலும் உண்டியலை உடைத்து திருடர்கள் திருடி இருக்கிறார்கள்.

இச்சம்பவம் தேனிவாழ் பக்தர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை திருடர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் காவலர்கள் இரவு ரோந்து பணியில் கோயில்களையும் கண்காணிக்க வழிகாட்டுதல் செய்ய வேண்டும்.

சிறையிலிருந்து உண்டியல் திருடர்கள் வெளியே வந்தாலும் தொடர்ந்து இவர்களை கண்காணிக்க வேண்டும். வரும் காலங்களில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க நகரில் உள்ள அனைத்து கோயில் பூசாரிகளை வரவழைத்து கூட்டம் போட்டு கோயிலை பாதுகாப்பது எப்படி என்று அறிவித்தல் செய்ய வேண்டும்.

கோயில் உள்ள முக்கிய வீதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க வலியுறுத்தியும் வழிகாட்டு நெறிமுறை வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. தேனி நகர பொதுச்செயலாளர் சிவராமன் ஜீ, தேனி நகர துணை தலைவர்கள் நாகராஜ் ஜீ, சிவா ஜீ, நகர துணை செயலாளர் கனகுபாண்டி ஜீ, நகர செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் ஜீ, EB மணிகண்டன் ஜீ, அழகு பாண்டி ஜீ, உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் கோம்பை இளம்பரிதி ஜீ, மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News