உக்ரைன் போரில் ரஷ்யாவை கை விட்ட ஆயுதங்கள்..! என்ன செய்ய போகிறார் புட்டீன் ?
ரஷ்யாவுக்கு எதிராக 40 நாடுகள் களத்தில் நிற்கின்றன, அவற்றின் ஆயுத மற்றும் பணபலத்தின் முன் ரஷ்யா தடுமாறுகின்றது
ரஷ்ய அதிபர் புட்டீனின் முதல் நம்பிக்கை ஆயிரக்கணக்கான சோவியத் கால டாங்கிகளும் பெரும் பீரங்கிகளும் தான். அதன் தாக்குதல் திறன் அது ஒரே நாளில் உக்ரைனை பிடித்து விடும் என நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. உக்ரைன் பயன்படுத்திய அமெரிக்க ஜாவலின் ஏவுகணைகள் ரஷ்ய டாங்கிகளை தகர்த்து போட்டன, வழக்கமாக விமானப்படை குண்டுவீசித்தான் தரைப்படை முன்னேற வழிசெய்யும். ஆனால் குண்டு வீச வந்த ரஷ்ய விமானங்களை உக்ரைன் வீழ்த்தியது. இதனால் ரஷ்ய விமானப்படை களம் இறங்காமல் ஏவுகணைகள் மட்டும் வீசப்பட்டது. அதுவும் பலன் தரவில்லை.
விளைவு, ரஷ்யா உக்ரைன் தலைநகரில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டது. பின்வாங்கிய ரஷ்யா எல்லைகளில் மட்டும் போர் தொடுத்தது. மேலும் ரஷ்யா அதிபர் புட்டீன் கப்பல்படை ஒரு போதும் தங்களை கைவிடாது என நம்பினார். கருங்கடல் கப்பல் தொகுதியின் பலம் அபரிமிதமானது என்றும், யாராலும் அசைக்கமுடியாத கப்பல்கள் தங்களிடம் இருப்பதாகவும் நம்பினார்.
ஆனால் மொஸ்வா உள்ளிட்ட பலமான கப்பல்களை உக்ரைன் மூழ்கடித்தது, நிச்சயம் அக்கப்பலில் ஏவுகணை தடுப்பு இருந்தும் ஏன் கப்பல் மூழ்கியது என்பதில் ரஷ்யா குழம்பிப்போய் உள்ளது. ரஷ்யாவின் தொழில்நுட்பங்களுக்கு உக்ரைன் பெரும் சவால் விட்டு வருகிறது. இப்படி கடல்படையும் தரைப்படையும் அடிவாங்கியபின் ரஷ்யாவால் பெரிதாக ஏதும் செய்யமுடியவில்லை
புட்டீனின் மிகப்பெரிய ஆயுதம் ஐரோப்பாவுக்கு செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம். இது இல்லையென்றால் ஐரோப்பா பெரும் சிக்கலில் மாட்டும் என்பதும் புட்டீனுக்கு தெரியும்.ஆனால் ஐரோப்பிய நாடுகள் வேறுவழிக்கு தாவி ரஷ்ய இறக்குமதியினை குறைத்தன, போதாக்குறைக்கு கடலடி எரிவாயு குழாய் முற்றிலும் தகர்க்கப்பட்ட நிலையில் ரஷ்ய எரிவாயு கிட்டதட்ட நின்று விட்டது.
இப்படி தன் மிரட்டல் ஆயுதங்கள், மிரட்டல் வழிமுறைகள் அனைத்தும் கைவிட்டு போன நிலையில் மகாபாரத துரியோதனனாக தவிக்கிறார் புட்டீன்.உண்மையில் உக்ரைனை மட்டும் புட்டீன் மிரட்டவில்லை. அதன் எல்லையில் போலந்து, ஸ்வீடன் , பின்லாந்து என பலநாடுகளை மிரட்டிக்கொண்டிருந்தார். அந்த நாடுகள் அனைத்தும் ரஷியா வெல்ல முடியாத நாடு என்ற அச்சத்தில் இதுவரை இருந்தன.
உக்ரைன் யுத்தம் ரஷ்யானவிற்கு கொடுத்த தோல்வியில் அந்த நாடுகள் அனைத்தும் எழுந்து நிற்கின்றன. இனி போர்தொடுப்போம் என ரஷ்யாவால் மிரட்டமுடியாது. அப்படி மிரட்டினாலும் உக்ரைன் நிலை தான் ரஷ்யாவிற்கு மீண்டும் ஏற்படும். இப்படி எல்லா ஆயுதமும் கைவிட்ட நிலையில் இருக்கின்றார் புட்டீன்.உண்மையில் ரஷ்யாவுக்கு எதிராக 40 நாடுகள் களத்தில் நிற்கின்றன, அவற்றின் ஆயுத மற்றும் பணபலத்தின் முன் ரஷ்யா தடுமாறுகின்றது, அவர்கள் ஆயுதம் முன் ரஷ்ய தொழில்நுட்பம் தோற்கின்றது
உக்ரைனின் நான்கு மாகாணங்களை ரஷ்யா இணைத்தாலும் பின்னாலே உக்ரைன் மீட்டுக் கொண்டு வருவது புட்டீனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்பொழுது புட்டீன் தன் கடைசி ஆயுதமான அணு ஆயுதம் பக்கம் திரும்புகின்றார். அவர் ஒருமாதிரியான ஆசாமி, யுத்தம் தொடங்கும் முன்பே, ரஷ்யா ஆதிக்கம் செலுத்தாத உலகம் ஏன் இருக்கவேண்டும்? என எச்சரித்தவர். இதனால் பெரும் அச்சமும் பரபரப்பும் ஐரோப்பா பக்கம் எழுந்து நிற்கின்றது, அணு ஆயுதம் என்பது ரஷ்யாவிடம் மட்டும் அல்ல பல நாடுகளிடம் உண்டு என்பதால் விஷயம் தீவிரமாகின்றது. அணு ஆயுதம் மிக கனமானது அதனை எடுத்து செல்ங ஏவுகணைகளோ அல்லது பிரத்யோக விமானங்களோ வேண்டும். அவ்வகை விமானங்களை இப்பொழுது பறக்க விட்டு பதட்டத்தை அதிகரித்து வருகிறார் புட்டீன்.