முல்லை பெரியாறு நீர் மட்டம் 132 அடியை கடந்தது

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 132.20 அடியாக உள்ளது.;

Update: 2022-05-29 02:30 GMT

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

கேரளாவில் பெய்து வரும் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 132 அடியை கடந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 250 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 100 கனஅடியாகவும் உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடி நீர் குறித்த நேரத்தில் ஜூன் முதல் தேதியில் திறக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

Tags:    

Similar News