பெற்றோர் வேலைக்கு போக சொன்னதால் தற்கொலை செய்து கொண்ட மகன்
சின்னமனுார் அருகே ஓடைப்பட்டியில் பெற்றோர்கள் வேலைக்கு போக சொன்னதால் வாலிபர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்;
சின்னமனுார் அருகே ஓடைப்பட்டி சத்யாநகரை சேர்ந்த கனகராஜ்- புனிதா தம்பதியரின் மகன் கருணாநிதி, 23. இவர் பள்ளிப்படிப்பு முடித்து விட்டு டிரைவராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி உள்ளார். மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. கூலி தொழிலாளிகளான பெற்றோர்கள் மகனிடம் மது அருந்தக்கூடாது. வேலைக்கு செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனால் மனம் உடைந்த கருணாநிதி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.