போடியில் வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு: தீயணைப்புத்துறையினர் மீட்பு

போடியில் வீட்டிற்குள் புகுந்த ஏழு அடிநீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பினை தீயணைப்பு படையினர் மீட்டு வனத்திற்குள் விட்டனர்.

Update: 2021-11-16 13:55 GMT

போடியில் கட்டுவிரியன் பாம்பினை பிடித்த தீயணைப்பு படையினர்.

போடி புதுக்காலனி ஸ்பைஸ் வேலி பள்ளி அருகில் ஒரு வீட்டிற்குள் ஏழுஅடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு நுழைந்தது. போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து வந்து பாம்பினை பிடித்து பத்திரமாக சென்று வனத்திற்குள் விட்டனர்.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை வீடுகளுக்குள் பாம்பு வருவது சாதாரண விஷயம் தான். இருப்பினும் கடும் விஷம் கொண்ட ஏழு அடிநீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு வந்தது சற்று கலங்கடித்து விட்டது என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News