ஊழியர்களை ஏமாற்றுகிறதா தமிழக அரசு? சமூக வலைதளங்களில் வைரலாகும் பகிர்வு
ஊழியர்களை எப்படியெல்லாம் அரசு ஏமாற்றி உள்ளது என்ற பதிவு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
அகவிலைப்படி உயர்வு தொடர்பான, முதல்வரின் அறிவிப்பு குறித்த கண்ணோட்டம் என்ற தலைப்பில் அரசு ஊழியர்களின் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு வாசகர்களின் பார்வைக்கு...
உண்மையில் இதற்கு அரசு மட்டுமே பதிலளிக்க முடியும். எனவே நாம் அந்த பதிவினை அப்படியே கொடுத்துள்ளோம். அரசு ஏமாற்றுகிறது என்ற தலைப்பில் அந்த பதிவு அரசு ஊழியர்களின் குழுக்களில் சுற்றி வருகிறது. ஒரு தவணை அகவிலைப்படி வழங்கியதால், அரசுக்கு ₹2359 கோடி கூடுதல் செலவு. (சராசரியாக 2300 கோடி.) கொரோனாவை காரணம் காட்டி, கடந்த ஆட்சியில் (2020) முடக்கப்பட்ட இரு தவணைகள்₹ 4600 கோடி அரசுக்கு லாபம்.2021ல் தேதிகள் கடந்த அறிவிப்பால்₹ 4600 கோடி அரசுக்கு லாபம்.
2022ல் இரு தவணைகள் முடக்கத்தால்₹ 4600 கோடி அரசுக்கு லாபம்.ஆக, அரசு ஊழியர், ஆசிரியர்களை வஞ்சித்து, அகவிலைப்படியில் மட்டும் அரசு சுருட்டியது ₹13800 கோடி.சரண் விடுப்பில், தோராயமாக ஒருவருக்கு ஆண்டுக்கு ₹15000/ என்றால், தோராயமாக 100,00,00 பேருக்கு ₹15,000கோடி.ஆக, நம்மை ஏமாற்றி, நம்மிடமிருந்து அரசு பறித்தது ₹28800 கோடி.இதில், கொரோனாவுக்காக கடந்த ஆட்சியில் அரசு ஒதுக்கியது ₹5000கோடி.இந்த ஆட்சியில் ₹5000கோடியென வைத்துக் கொண்டால், மொத்தம் 10000கோடி.
கொரோனாவை காரணம் காட்டி நமக்கு சேர வேண்டிய ₹28800கோடியை பறித்து, கொரோனாவுக்காக ₹10000கோடியையை மட்டும் செலவழித்தது போக, நம்மிடமிருந்து ₹18800கோடியை அரசு சுருட்டியுள்ளது.இந்நிலையில், ஜனவரி முதல் தேதி முதல்வர் அறிவித்த 4%திற்கு, ₹2359 கோடி அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையென ஒரு பச்சைப் பொய்யை முதல்வர் கூறியுள்ளது நியாயம் தானா?
உண்மையில், அரசிடம் உள்ள நமது ₹18800 கோடியில் ₹2359 கோடி போக, ₹16441கோடி நமது பணம் அரசிடம் உள்ளதென்பதுதான் உண்மை. இது நாம் கொண்டு வந்த அரசு என்ற எண்ணம் நமக்கிருப்பது போல், இது அவர்கள் கொண்டு வந்த அரசு என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லாமல் இருப்பது அவருக்கே கேடாய் முடியலாம்.
சொந்த கோழி தோல் முடையிட்டால் அதன் நிலையென்னவாகும் என்பது அனைவரும் அறிந்ததே.அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள், கண்களை விற்று சித்திரம் வாங்கக்கூடாது. ஆனால், இன்று அதை நோக்கித்தான் சங்கங்கள் செல்கின்றனவோவென்ற சந்தேகத்தை நோக்கி, நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை யாரும் மறுக்க இயலாது.
வெளிப்படையாக மறுத்தாலும், அனைவரின் எண்ணமும் இப்படியானதாகத்தானிருக்கும். நானுணர்ந்ததைப் பகிர்ந்துள்ளேன். ஏற்பதும், மறுப்பதும் அவரவரைப் பொருத்தது. இப்படிக்கு அரசு ஊழியன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த பதிவுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நாளை அரசுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பதிவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் பதிவின் உண்மைத்தன்மை என்ன என்பதை அரசு தவிர வேறு யாரும் விளக்க முடியாது.