பெரியகுளம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கட்டட வசதி தேவை

பெரியகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கட்டட வசதி தேவை என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.;

Update: 2023-11-04 16:30 GMT

பைல் படம்

பெரியகுளத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தினால் வாகன போக்குவரத்தும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இடங்களில், பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி , அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் பணி நிமித்தமாக செல்லும் அனைவருக்கும் கால தாமதமும் நேர விரயமும் ஏற்படுகிறது. அடிக்கடி ஆம்புலன்சும், அவசர கால வாகனங்களும் சிக்கிக் கொள்கின்றன. போக்குவரத்து காவலர்களின் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படும் நிலையில் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. நகரில் பல அரசு கட்டிடங்கள் காலியாகவும் சிதலமடைந்தும் இருக்கிறது.

நகராட்சிக்கு எதிர்ப்புறம் பொதுப்பணித்துறை அலுவலகம், அதனை அடுத்த குடியிருப்பு பகுதி, வைகை அணை சாலையில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடம், கம்பம் சாலையில் உள்ள நுகர் பொருள் வாணிப கிட்டங்கி அவற்றில் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுத்து நகரின் ஒதுக்குப் புறத்தில், இடிந்து விழும் நிலையில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் இயங்கும் போக்குவரத்து காவல் நிலையத்தை நகர மைய பகுதிக்கு மாற்றி அமைத்து, போதிய காவலர்களை நியமித்து நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags:    

Similar News