தேனி உழவர் சந்தையில் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்தது

தேனி உழவர் சந்தையில் கிலோ நுாறு ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று 10 ரூபாய் குறைந்தது.

Update: 2023-07-04 03:14 GMT

தேனியில் தக்காளி விளைச்சல் குறைவு, வரத்து குறைவு தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் உழவர்சந்தையிலேயே விலை கிலோ 100 ரூபாயினை எட்டியது. வெளிமார்க்கெட்டில் கிலோ 125 ரூபாயினை தாண்டியது. இந்நிலையில் தக்காளி விலை இன்று 10 ரூபாய் விலை குறைந்துள்ளது.

வரத்து அதிகரிப்பாலோ, தேவை குறைவாலோ விலை குறையவில்லை. விவசாயிகள் தங்களாக முன்வந்து பொதுமக்கள் நலன் கருதி விலையை குறைத்துள்ளனர். அரசும், அதிகாரிகளும் விலையை குறைக்குமாறு வியாபாரிகளை கேட்டுக் கொண்டனர். இதற்கு வியாபாரிகளும் செவி சாய்த்தனர். இதுவும் தக்காளி விலை குறைய முக்கிய காரணம். எப்படியும் சீரான நிலை உருவாக இன்னும் சில நாட்கள், ஏன் மாதங்கள் கூட ஆகலாம். காரணம் மழை தொடங்கி விட்டதால், அதிக மழைப்பொழிவு தக்காளி விலைச்சலை பாதிக்கும். எனவே தக்காளியின் எதிர்கால விலை நிலவரம் குறித்து சரியாக கணிக்க முடியாது என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உழவர்சந்தையின் பிற காய்கறிகள் விலை நிலவரம் கிலோவிற்கு (ரூபாயில்): கத்தரிக்காய் - 38, கொத்தவரங்காய்- 35, சுரைக்காய்- 15, புடலங்காய்- 30, பாகற்காய்- 50, பீர்க்கங்காய்- 50, முருங்கைக்காய்- 48, பச்சை மிளகாய் (உருட்டு)- 100, அவரைக்காய்- 60, தேங்காய்- 25, உருளைக்கிழங்கு- 26, கருணைக்கிழங்கு- 64, சேப்பங்கிழங்கு- 64, கொத்தமல்லி- 80, புதினா- 50, சின்னவெங்காயம்- 80, பெரிய வெங்காயம்- 25, இஞ்சி- 230, வெள்ளைப்பூண்டு- 280, பீட்ரூட்- 36, நுால்கோல்- 54, முள்ளங்கி- 32, முருங்கை பீன்ஸ்- 120, முட்டைக்கோஸ்- 32, கேரட்- 65, டர்னிப்- 65, சவ்சவ்- 24, காலிபிளவர்- 35. கீரை வகைகள் கிலோ- 25 என விற்கப்படுகிறது. அனைத்து காய்கறிகளின் விலைகளும் சற்று அதிகமாக உள்ளது.

ஆனாலும் வெளிமார்க்கெட்டில் இதன் விலைகள் சராசரியாக 25 சதவீதம் வரை அதிகம் விற்பனையாகிறது.

Tags:    

Similar News