சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
13 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, தொழிலாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.;
பைல் படம்
ஓடைப்பட்டி புத்தம்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 35. கூலித்தொழிலாளியான இவர், இங்குள்ள ஒரு பெண்ணிடம் தவறான உறவு வைத்திருந்தார். அந்த பெண்ணின் 13வது மகளான பள்ளிச்சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இவர்கள் இருவரையும் தேனி மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இந்நிலையில் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே உத்தரவின் அடிப்படையில், முத்துப்பாண்டியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.