வாலிபர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனை முற்றுகை

வாலிபர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையினை முற்றுகையிட்டனர்.;

Update: 2022-05-12 03:00 GMT

மதுரை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் மகபூப்கான்(வயது 31.) இவர் உத்தமபாளையம் அருகே கோம்பையில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். திடீரென அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உறவினர்கள் வந்து பார்த்த போது, இறந்த மகபூப்கான் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதனை தொடர்ந்து அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை நடத்த வலியுறுத்தி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையினை முற்றுகையிட்டனர்.இதுபற்றி கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News