முல்லைப்பெரியாறு அணையின் இன்றயை நீர்மட்டம் 138.25 அடி

அதிக மழைப்பொழிவின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 138.25 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2022-08-07 05:16 GMT

முல்லைப்பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அணையில் இன்று காலை நிலவரப்படி 21.4 மி.மீ., மழை பெய்தது. தேக்கடியில் 36.8 மி.மீ., மழை பெய்தது. அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர் மட்டம் 138.25 அடியாக உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 70.01 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 3040 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையி்ல் இருந்து விநாடிக்கு 2800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளும் திறக்கப்பட்டுள்ளது. சண்முகாநதி அணை நீர் மட்டமும் 38.30 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை நீர் மட்ட உயரம் 52.55 அடியாகும். சண்முகாநதி அணை மழை மறைவு பகுதியில் அமைந்துள்ளது. குறைவான மழையே இதன்நீர்பிடிப்பு பகுதியில் பெய்வதால் இந்த அணை மட்டும் நிரம்புவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்.

Tags:    

Similar News