பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மாணவர் உடலுக்கு சொந்த ஊரில் அஞ்சலி
பிலிப்பைன்ஸ்சில் இறந்த போடி மாணவர் உடலுக்கு சொந்த ஊரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தா;
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த போடி ராசிங்காபுரம் மாணவர் உடலுக்கு சொந்த ஊரில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார்.
போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த மாணவர் சஷ்டிகுமார் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்தார். கடந்த ஜனவரி 15ம் தேதி, அங்குள்ள கவான்ட்டி லகுனா நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது, நீர்சுழலில் சிக்கி இறந்தார். அவரது உடல் சென்னை வரை விமானத்தில் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கு செலவான 4 லட்சம் ரூபாய் பணத்தை தமிழக அரசு வழங்கியது. அவரது ஊரில் மாணவர் உடல் கொண்டு வரப்பட்டதும் பெற்றோர்கள், உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க.தமிழ்செல்வன் உட்பட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின் மாணவர் குடும்பத்திற்கு அஞ்சலி செய்தி அனுப்பியிருந்தார்.