வேட்பு மனு பரிசீலனை தொடர்பாக போடியில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் தோல்வி
போடியில் வெள்ளிக்கிழமை இரவு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது
போடியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால் இன்று(சனிக்கிழமை) அங்கு பிரச்னைகள் வரும் என எதிர்பார்த்து போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
போடியில் தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். இதனை கண்டித்து அ.தி.மு.க.,வினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தி.மு.க.,வினரின் ஊர்வலத்திற்கு போட்டியாக பா.ஜ.,வினரும் ஊர்வலமாக வந்தனர்.இப்படி தேர்தல் நடைமுறைகள் கைமீறி போவதால்,சனிக்கிழமை நடைபெறும் வேட்புமனு பரிசீலனையில் பிரச்னைகளை தவிர்க்க நகராட்சி கமிஷனர் ஷகிலா, டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
இதில் வேட்புமனு பரிசீலனையின் போது ஒருவர் மட்டும் வேட்பாளருடன் வரலாம். பரிசீலனை நடைபெறும் வளாகத்திற்குள் வேட்பு மனுதாக்கல் செய்தவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் நிபந்தனை விதித்தனர். இதனை ஏற்க மறுத்து அனைத்து கட்சியினரும் கூட்டத்திலிருந்து வெளியேறினர். கூட்டம் தோல்வியில் முடிந்ததால் போடி நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.