கள்ளக்காதல் ஜோடிக்கு கோயிலி்ல் திருமணம்: பொதுமக்கள் கடும் அதிருப்தி
உத்தமபாளையம் கோயிலில் கள்ளக்காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாட்டிற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு கடந்த வாரம் கணவனுக்கு தெரியாமல் வந்த மனைவிக்கும், மனைவிக்கு தெரியாமல் வந்த கணவனுக்கும் திருமணம் செய்து வைத்தனர். இருவருமே குடும்பத்திற்கு தெரியாமல் கள்ளக்காதல் செய்து கோயிலில் வந்து திருமணம் செய்த படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்தால், பல கேள்விகள் கேட்டு ஆவணங்கள் கேட்கின்றனர். ஆனால் கோயிலில் இந்த சமய அறநிலையத்துறை நிர்ணயித்த பணம் கட்டினால் போதும், எந்த கேள்வியும் கேட்காமல் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
இந்த வாயப்பினை பயன்படுத்தி கள்ளக்காதல் ஜோடிகள் இரு குடும்பங்களை கெடுத்து தங்கள் சுயநலத்திற்கு திருமணம் செய்ய புனித தலங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனை தடுக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.