போடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
போடி அருகே கஞ்சா விற்ற வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.;
தேனி மாவட்டம் போடி டவுன் எஸ்.ஐ., பிரேம்ஆனந்த் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். போடி சாலைக்காளியம்மன் கோயில் அருகே கார்த்திக் 'வயது 24,) கவுதம்,( 21 )ஆகிய இரண்டு பேர் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். இவர்களை எஸ்.ஐ., பிரேம் ஆனந்த் கைது செய்தார். இவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் பதுக்கி வைத்துள்ள கஞ்சா குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.