பெரியகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் டீ மாஸ்டர் பலி
பெரியகுளத்தில் டூ வீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் டீ மாஸ்டர் பலியானார்.;
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சேகர்,(வயது 42. )டீ மாஸ்டரான இவர், பெரியகுளம் வந்து விட்டு தேவதானப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். சில்வார்பட்டி வ.உ.சி., தெருவை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் என்பவர் அதிவேகமாக டூ வீலரை ஓட்டிச் சென்று சேகர் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வடகரை போலீசார் சுந்தரமுருகேசனை கைது செய்தனர்.