வரி கட்டினால் தான் வேலை உள்ளாட்சிகளில் கெடுபிடி

வீட்டு வரி, குழாய் வரி கட்டினால் மட்டுமே அரசின் நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகங்கள் கெடுபிடி;

Update: 2022-04-03 01:55 GMT

மார்ச், ஏப்ரல் வந்தாலே வரி வசூல் டார்க்கெட்டை முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வந்து விடுகிறது. இதற்காக சில கடுமையான நடைமுறைகளை கூட கையாள்கின்றனர். இந்த ஆண்டு கடுமையின் உச்சத்திற்கே சென்று விட்டனர். அதாவது கிராம நுாறு நாள் வேலை திட்டத்திற்கு (தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) வரும் பயனாளிகள் யாராவது வீட்டு வரி, தொழில் வரி, குழாய் வரி கட்டாமல் இருந்தால் உடனே கட்ட வேண்டும். வரி கட்டாதவர்களை வேலைக்கு கூப்பிட மாட்டோம் என கிராம ஊராட்சி நிர்வாகங்கள் கடும் கெடுபிடி காட்டி வருகின்றன. குறிப்பாக குள்ளப்புரம் ஊராட்சியில் இந்த பிரச்னை அதிகம் உள்ளது. இதே நடைமுறையை எல்லா ஊராட்சிகளும் கையாள்வதாக பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News