தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை 110; நெல் கொள்முதல் நிலையமோ 13 தான்!

தேனி மாவட்டத்தி்ல் நெல் கொள்முதல் நிலையங்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகள் உள்ளன.

Update: 2022-03-29 03:00 GMT

கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் குறைந்தபட்சம் இரண்டு போகம் நெல் சாகுபடி நடக்கிறது. ஆனால் மாவட்டத்தில் நெல் வாங்க 13 அரசு கொள்முதல் நிலையங்கள் மட்டுமே உள்ளன.

ஆனால், மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 110 உள்ளன. இதனை சுட்டிக்காட்டிய விவசாயிகள், தேனி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்துங்கள். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறையுங்கள். குறிப்பாக நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் இல்லாமல், நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என கலெக்டருக்கு மனு அனுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News